போலீஸ் கண் முன்னே பசுப் பாதுகாவலரை அடித்துத் துன்புறுத்திய கும்பல்..! மகாராஷ்டிராவில் பகீர்..!

20 October 2020, 4:23 pm
cows_updatenews360
Quick Share

மும்பையின் நாலசோபிரா பகுதியில் ஒரு கும்பல், கால்நடைகளை மீட்பதற்காக வெளியே வந்த பசுப் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கியது. இந்த நபர் நாலசோபராவில் உள்ள நகிந்தாஸ் பாதாவில் வசிக்கும் ராஜேஷ் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராஜேஷ் பல ஆண்டுகளாக விலங்கு நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கால்நடைகளை மீட்பதற்காக காவல்துறையினருடன் சோபாரா கிராமத்திற்கு சென்றபோது கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட ஒரு கும்பல் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அவர் பல எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுக்கு ஆளானார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

ஒரு மாடு மற்றும் பசுங் கன்றை கொல்வதற்காக சிலர் கொண்டு வந்ததாக ராஜேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் கிராமத்திற்குச் சென்றபோது அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சில மணி நேரம் கழித்து, ராஜேஷும் போலீசாரும் மீண்டும் கிராமத்திற்குச் சென்று ஒரு மாடு மற்றும் ஒரு கன்றைக் கண்டனர். அப்போது தனது பைக்கில் வந்த ராஜேஷ் போலீசார் கண்முன்னே கும்பலால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஜூனா அகாரா மற்றும் அவர்களது ஓட்டுநருடன் தொடர்புடைய இரண்டு சாதுக்கள் ஒரு கும்பலால் போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தேசிய அளவில் எதிர்ப்பைத் தூண்டியது. இரண்டு சந்நியாசிகள் மஹந்த் கல்பவ்ருக்ஷா கிரி மற்றும் சுஷில்கிரி மகாராஜ் என அடையாளம் காணப்பட்டனர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் அதே போல் ஒரு கும்பலால் போலீஸ் கண் முன்னே விலங்கு நல அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0