நாட்டின் 9 வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பதிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

29 January 2021, 9:44 am
fog heavy - updatenews360
Quick Share

புதுடெல்லி: நாட்டின் 9 வடமாநிலங்களில் மித மற்றும் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை பொழிந்து குளிர்காலம் நடந்து வருகிறது. இதனால் வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனி அடர்ந்து காணப்படுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிக பனிப்பொழிவால் காலையில் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது.

இதனால் வாகன மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில்,

பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசத்தின் வடமேற்கு பகுதிகள், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. இதேபோன்று, தலைநகர் டெல்லி, மேற்கு வங்காளத்தின் இமயமலை அடிவார பகுதிகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், சண்டிகரிலும் குறிப்பிட்ட பல பகுதிகளில் மித அளவிலான பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Views: - 1

0

0