இந்தியாவின் நீண்ட கால பிரதமர் மோடி தான்..! காங்கிரசை சாராத தலைவராக புதிய சாதனை..!

13 August 2020, 8:53 pm
Modi_UpdateNews360
Quick Share

நரேந்திர மோடி தனது ஆட்சிக் காலத்தில், புதிய சாதனையைப் படைத்துள்ளார். காங்கிரஸ் அல்லாத பிரதமராக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமராக அவர் உருவெடுத்துள்ளார். 

முன்னதாக மூன்றுமுறை பிரதமர் பொறுப்பேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த பெருமையைக் கொண்டிருந்தார். அவர் முதல்முறையாக பதவியேற்றபோது முதலில் மே 16, 1996 முதல் மே 28, 1996 வரை 13 நாட்கள் பதவி வகித்தார்.

பின்னர் அவரது 408 நாள் இரண்டாவது பதவிக்காலம் 1998 மார்ச் 19 முதல் ஏப்ரல் 17 வரை இருந்தது. பின்னர் அக்டோபர் 13, 1999 முதல் மே 22, 2004 வரை 1,847 நாட்கள் என மொத்தம் 2,268 நாட்கள் பதவியில் இருந்தார்.

இந்நிலையில் இன்று மோடி தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 2,268 நாட்கள் பிரதமராக பணியாற்றிய வாஜ்பாயை விஞ்சியுள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய 4’வது பிரதமராகவும் அவர் உள்ளார். தற்போது வாஜ்பாயை முந்தியுள்ள மோடி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை விட பின் தங்கியுள்ளார்.

இதற்கிடையில் குஜராத்தின் மிக நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமையும் மோடிக்கு உண்டு. மோடி அலை 2014’ல் பாஜகவை அதிகாரத்திற்கு கொண்டு சென்றது.

இந்த அலை 2019’ல் சுனாமியாக மாறியது, இதன் விளைவாக இன்னும் 2014’ஐ விட அதிக இடங்களில் வென்று மகத்தான வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார்.

Views: - 30

0

0