கொரோனா பாதிப்பு நிலவரம்: வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

13 July 2021, 8:33 am
Modi_Meeting_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா நிலவரம் குறித்து வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனாவின் 2வது அலை நாட்டின் பிற பகுதிகளில் குறைந்து வந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் குறைந்தபாடில்லை. அங்கு சில மாநிலங்களில் பாதிப்பு குறையாமல் நீடித்து வரும் நிலையில் சில பகுதிகளில் தொற்று அதிகரிக்கவும் செய்கிறது. எனவே வடகிழக்கு பிராந்தியத்தில் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

modi - updatenews360

இந்நிலையில், வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார். அந்தவகையில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

இதில் தொற்றை தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியும் பிரதமர், பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவதற்கான வழிகளையும் பரிந்துரைப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 167

0

0