இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி….!!!

Author: Aarthi
16 October 2020, 5:33 pm
family welfare - updatenews360
Quick Share

புதுடெல்லி: உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என்றும் 10 லட்சம் மக்கள் தொகையில் 81 பேரே உயிரிழந்து உள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்புகளை பெற்றிருக்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவில் தொற்றின் வேகம் சரிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் எட்டும் அளவுக்கு உயர்ந்த தினசரி பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

Corona Test - Upatenews360

நாள்தோறும் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைந்து உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையில் 81 பேரே உயிரிழந்து உள்ளனர். கடந்த அக்டோபர் 2ந்தேதியில் இருந்து 1,100க்கும் குறைவான உயிரிழப்புகளே தொடர்ந்து பதிவாகி வந்துள்ளன.

இதேபோன்று, தொடர்ந்து உயிரிழப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. நாட்டில் உள்ள 1.52% உயிரிழப்பு விகிதம் என்பது 2020ம் ஆண்டு மார்ச் 22ந்தேதியில் இருந்து மிக குறைந்த அளவாகும் என்று தெரிவித்து உள்ளது.

Views: - 41

0

0