இஷ்க் படபாணியில் கேரளாவில் நடந்த கொடுமை… தாய் – மகன் அளித்த புகார்… வசமாக சிக்கிய இளைஞர்!!

Author: Babu Lakshmanan
2 September 2021, 5:38 pm
ishq - updatenews360
Quick Share

கேரளாவில் காரில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் அருகே பரவூர் பூச் பகுதியில் 23 வயது நபர் தனது தாயுடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, இரவு நேரம் என்பதால் பயணத்திற்கு முன்பாக சாலையின் ஓரம் காரை நிறுத்தி விட்டு, இருவரும் உணவை அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அஷிஷ் என்பவர் கார் ஓரமாக இருப்பதையும், அதிலும் ஆணும் பெண்ணும் இருப்பதை கண்டுள்ளார். இருவரையும் காரை விட்டு இறங்கும்படி தொந்தரவு செய்துள்ளார். இருவரும் இறங்க மறுத்த நிலையில், ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த இளைஞர் பதிலுக்கு திட்டி உள்ளார். பின்னர் ஆஷிஷ் அந்த இளைஞரையும் அம்மாவையும் மோசமான வார்த்தைகளில் திட்டி அவர்களின் காரில் தாக்குதல் நடத்த முயன்று உள்ளார். இந்த மோதலில் அந்த இளைஞருக்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த பெண் மீது கற்களை வீசி எறிந்துள்ளார். அவர்களை தாக்கிவிட்டு ஆஷிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அம்மாவும், மகனும் அந்த இரவே கொல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தமிழகத்திற்கு தப்பியோட முயன்ற அஷிஷை எல்லையில் வைத்து கைது செய்தனர்.

மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ஹிட் அடித்த இஷ்க் படத்தின் கதையை போலவே, காருக்குள் எப்படி பெண்ணும் ஆணும் உட்கார்ந்து இருக்கலாம் என்று கேட்டு அந்த நபர் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 413

0

0