குடும்பத்துடன் கால்வாயில் குதித்த தாய் : கடவுள் போல வந்து காப்பாற்றிய காவலர்.. 2 பேர் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2021, 11:23 am
Rescue - Updatenews360
Quick Share

ஆந்திரா : மகன் மற்றும் மகளுடன் கால்வாயில் குதித்த பெண்ணை காவல் ஆய்வாளர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் புஜ்ஜி. நேற்று மாலை அவர் தன்னுடைய எட்டு வயது மகன், ஐந்து வயது மகள் ஆகியோருடன் கண்டிபள்ளி வழியாக ஓடும் போலவரம் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கவனித்து கொண்டிருந்த நபர் ஒருவர் கண்டிபள்ளி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்க்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். தகவலை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ் விரைந்து சென்று போலவரம் கால்வாயில் குதித்து மூன்று பேரையும் மீட்க முயன்றார்.

அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரின் உதவியுடன் புஜ்ஜி அவருடைய எட்டு வயது மகன் ஆகியோர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகள் லட்சுமி துர்காவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்கொலை செய்ய கால்வாயில் குதித்த மூவரையும் குதித்து காப்பாற்றிய
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் செயலுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Views: - 297

0

0