இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..! இரண்டாமிடத்தில் வாஜ்பாய்..! MOTN சர்வே முடிவு வெளியீடு..!

9 August 2020, 12:00 am
Modi_UpdateNews360
Quick Share

சமீபத்திய இந்தியா டுடே குரூப்-கார்வி இன்சைட்ஸ் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

MOTN கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 44 சதவீதம் பேர் இதுவரை இந்தியாவை ஆட்சி செய்தவர்களில் மோடியே சிறந்த பிரதமராக இருந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

அடல் பிஹாரி வாஜ்பாய் 14 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்திரா காந்தி 12 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் மன்மோகன் சிங் தலா 7 சதவீத வாக்குகளையும், லால் பகதூர் சாஸ்திரி 5 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த MOTN கணக்கெடுப்புகளில், முதல் இடத்திற்கான போட்டி முக்கியமாக பிரதமர் மோடி மற்றும் இந்திரா காந்தி இடையே இருந்தது. இருப்பினும், இந்த முறை, அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜனவரி 2020 MOTN கணக்கெடுப்பில், நரேந்திர மோடி நாட்டின் சிறந்த பிரதமராக 34 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போதைய கணக்கெடுப்பில், இந்திரா காந்தி 16 சதவீத வாக்குகளுடன் மோடியை அடுத்து இரண்டாம் இடத்திலும், வாஜ்பாய் 13 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தனர். ஜவஹர்லால் நேரு 8 சதவீதத்தையும், பின்னர் ராஜீவ் காந்தி 5 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

முன்னதாக ஆகஸ்ட் 2019 MOTN கணக்கெடுப்பில், 37 சதவீதம் பேர் நரேந்திர மோடியை சிறந்த பிரதமராக அறிவித்துள்ளனர். அப்போது இந்திரா காந்தி 14 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

ஆகஸ்ட் 2018’இல், MOTN கணக்கெடுப்பில் 26 சதவீத வாக்குகளைப் பெற்று நரேந்திர மோடி சிறந்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் இந்திரா காந்தி 20 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

நரேந்திர மோடியின் செல்வாக்கு ஆகஸ்ட் 2016 MOTN வாக்கெடுப்புக்குப் பின்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர் முதன்முதலில் பிரதமராக பொறுப்பேற்ற சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு.

ஆகஸ்ட் 2016 கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 17 சதவீதம் பேர் மோடிக்கு வாக்களித்து, அவரை மூன்றாவது இடத்தில் வைத்தார்கள். இந்திரா காந்தி அப்போது 23 சதவீத மக்களின் ஆதரவுடன் இந்தியாவின் சிறந்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் 18 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

MOTN வாக்கெடுப்பை டெல்லியைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஜூலை 15, 2020 முதல் ஜூலை 27, 2020 வரை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பு பாரம்பரியமாக நேருக்கு நேர் நேர்காணல் முறையைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. இருப்பினும், கணக்கெடுப்பின் இந்த பதிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து நேர்காணல்களும் ஒரு நிலையான கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி தொலைபேசியில் நடத்தப்பட்டன. அவை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

Views: - 35

0

0