தெலங்கானாவில் கனமழை பாதிப்பு…நிவாரணம் அளித்துள்ள பிரபலங்கள்..!!

21 October 2020, 9:39 am
siranjeevi - updatenews360
Quick Share

தெலங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பிற்கு திரையுலக பிரபலங்கள் நிவாரண நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். மேலும் நிவாரணப் பணிகளுக்கு நிதி வழங்க கோரி பிரமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

mageshbabu - updatenews360

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.1,350 கோடி வழங்க வேண்டும் என பிரமருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ். மேலும், மாநில அரசு சார்பில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களால் தெலங்கானாவில் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடியை வெள்ள பாதிப்பு நிவாரணமாக வழங்கியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். ரூபாய் 50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூபாய் 10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

Views: - 22

0

0