வேட்பாளர் மனுவை வாபஸ் வாங்க 10 லட்ச ரூபாய் பேரம்..! வைரலாகும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் ஆடியோ..!

29 October 2020, 12:58 pm
Dig_Vijaya_Singh_Audio_Viral_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக திக் விஜய சிங் தன்னுடைய வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டதாக சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.) வேட்பாளர் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, பாஜக மூத்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான திக் விஜய சிங்கை கடுமையாக சாடியுள்ளது.

திக் விஜய சிங் மற்றும் எஸ்பி தலைவர் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் லோகேந்திர மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங்கிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்றும், அவரே ஆடியோவை வைரல் செய்திருக்கலாம் என்றும் கூறினார்.

“திக்விஜய சிங் தேர்தலின் கடைசி கட்டத்தில் தனது கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவர் ஜனநாயகத்தை நம்பவில்லை. ஆனால் நிர்வாகத்தை நம்புகிறார். தேர்தல்களில் நிர்வாகத்தால் வெல்லப்படுவதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவரே ஆடியோவை வைரலாக்கியிருக்கலாம்” என பாஜக தலைவர் கூறினார்.

இன்று முன்னதாக, குவாலியரைச் சேர்ந்த எஸ்பி வேட்பாளர் ரோஷன் மிர்சா, திக்விஜய சிங் வரவிருக்கும் இடைத்தேர்தலில் இருந்து விலகுமாறு தன்னை கேட்டுக் கொண்டதாகவும், அதற்குப் பதிலாக கவுன்சிலர் சீட் கொடுப்பதாகவும் கூறியதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அஸ்லம் என்ற காங்கிரஸ் தலைவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற 10 லட்ச ரூபாய் கொடுப்பதாக உரியளித்ததாகவும் மிர்சா குற்றம் சாட்டினார்.

Views: - 33

0

0