பழக்க தோஷத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்கச் சொன்ன பாஜக தலைவர் சிந்தியா..! வைரலாகும் வீடியோ..!

1 November 2020, 3:04 pm
Scindia_UpdateNews360
Quick Share

மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 3 இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா, பழக்க தோஷத்தில் தனது முன்னாள் கட்சியான காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது கேலிக்கு உள்ளாகியுள்ளது.

குவாலியரில் உள்ள தப்ரா நகரத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் இமார்டி தேவிக்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற பேரணியில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசுக்கு வாக்களிக்கக் கோரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், “என் தப்ரா மக்களே, உங்கள் கையை உயர்த்தி, மாநில முதல்வர் சிவராஜ் சிங்கும் நானும் தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்ய உங்கள் முஷ்டியை முறுக்குங்கள். நவம்பர் 3’ஆம் தேதி நீங்கள் கை பொத்தானை அழுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாஜக தலைவர் சிந்தியா உடனடியாக தனது கருத்தை திருத்தி, பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் மாநில காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் கட்சியினர், “சிந்தியா ஜி, நவம்பர் 3 அன்று, மத்தியப் பிரதேச மக்கள் காங்கிரஸின் சின்னமான கை சின்னத்தை அழுத்துவார்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார்கள்.” என பதிவிட்டுள்ளது.

இந்நிலையில் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி தொடர்பு கொண்டபோது, எந்தவொரு நபருக்கும் இதுபோன்ற ஞாபக மறதி ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

49 வயதான சிந்தியா, 2002’ல் காங்கிரசில் சேர்ந்தார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவருக்கு விசுவாசமான 22 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இது கமல்நாத் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0

1 thought on “பழக்க தோஷத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்கச் சொன்ன பாஜக தலைவர் சிந்தியா..! வைரலாகும் வீடியோ..!

Comments are closed.