இனி உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை..! புதிய சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்..!

27 February 2021, 2:42 pm
Prision_UpdateNews360
Quick Share

தற்போதைய சூழ்நிலையில் உணவுக் கலப்படம் நாடு முழுவதும் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் உணவுக் கலப்படம் குறித்து அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உணவு மற்றும் போதைப்பொருள் கலப்படத்தை கட்டுப்படுத்த உடனடி சட்டத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவை புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, உணவுக் கலப்பட அச்சுறுத்தலை எதிர்த்து போபாலில் 2019 டிசம்பரில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.

ரோஷன்பூரிலிருந்து தலைநகரில் லால் பரேட் வரை பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் கலப்படத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, தூய உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது மத்தியபிரதேச அமைச்சரவை உணவுக் கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க, 2021 தண்டனை சட்டம் (மத்திய பிரதேச திருத்தம்) மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 

Views: - 11

0

0