குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது தொடரும்..! பிரதமர் மோடி உறுதி..!

Author: Sekar
16 October 2020, 3:00 pm
Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று வேளாண் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) கொள்முதல் செய்ய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இது நாட்டின் உணவுப் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கம் என்றும் கூறினார்.

எம்.எஸ்.பி கொள்முதல் விஞ்ஞான ரீதியில் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“எம்.எஸ்.பி மற்றும் அரசாங்க கொள்முதல் ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். இது சிறந்த வசதிகளுடன் மற்றும் விஞ்ஞான வழியில் தொடர்ந்து செயல்படுவது முக்கியம்.” என உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75’வது ஆண்டுவிழாவில் 75 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்ட பின்னர் மோடி கூறினார்.

வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களில் (ஏபிஎம்சி) உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதில் அரசாங்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது என்றார்.

ஏபிஎம்சிக்கள் தங்கள் சொந்த அடையாளத்தையும் வலிமையையும் கொண்டுள்ளன. மேலும் அவை பல ஆண்டுகளாக நாட்டில் உள்ளன என மோடி மேலும் தெரிவித்தார்.

Views: - 55

0

0