மும்பை தனியார் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து..! 10 பேர் பலியான பரிதாபம்..!

Author: Sekar
26 March 2021, 12:25 pm
fire_mumbai_hospital_updatenews360
Quick Share

மும்பையின் பாண்டப் பகுதியில் உள்ள தனியார் கொரோனா மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் கதம் கூறுகையில், ‘நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு மாலின் முதல் தளத்தில் நிலை-3 அல்லது நிலை-4 தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் மருத்துவமனைக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மாலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் 76 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” எனக் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். 70’க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த துயர சம்பவம் குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், “நான் ஒரு மாலில் ஒரு மருத்துவமனையைப் பார்த்தது இதுவே முதல் முறை. இது மிகவும் கடுமையான நிலைமை.

ஏழு நோயாளிகள் வென்டிலேட்டர்களில் இருந்தனர். 70 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்படும்.” என்றார்

Views: - 90

0

0