இரும்பு கம்பியால் பிறப்பிறுப்பு சேதம்… மும்பையில் நடந்த நிர்பயா சம்பவம்… ரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

Author: Babu Lakshmanan
11 September 2021, 4:38 pm
mumbai rape - updatenews360
Quick Share

மும்பை : டெல்லி நிர்பயா சம்பவம் போன்றே, மும்பையில் பலாத்காரம் செய்யப்பட்ட 34 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி இதுபோன்ற நடக்கக் கூடாது என்பதற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி நிர்பயா சம்பவம் போலவே மும்பையில் 34 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகிநாகா பகுதியில் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்துடன் மிதந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்ததில், பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி மூலம் சிதைக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையோரத்தில் வசித்துக் கொண்டே கிடைக்கும் வேலையை செய்து வந்த இந்தப் பெண்ணை மீட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், மோகன் சவுகான்(45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு வெட்கப்பட வேண்டிய சம்பவம் என்றும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Views: - 248

0

0