முன்னாள் பார்க் சிஇஓ தாஸ்குப்தாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு..! மும்பை நீதிமன்றம் அதிரடி..!

20 January 2021, 6:01 pm
Partho_Dasgupta_UpdateNews360
Quick Share

முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவின் ஜாமீன் மனுவை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனும் டிஆர்பி ஊழலில் அவர் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

டிஆர்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் தாஸ்குப்தா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

55 வயதான, முன்னாள் பார்க் சிஇஓ தாஸ்குப்தா ஒரு நீரிழிவு நோயாளி என்பதால் கடந்த சனிக்கிழமையன்று நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறைச்சாலையில் இருந்து மத்திய மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கபப்ட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

“இரத்த சர்க்கரை அளவு அதிகரித்த பின்னர் தாஸ்குப்தா மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் ஐ.சி.யு.வில் தான் இருக்கிறார். ஆனால் அவரது உடல்நிலை முன்பை விட நன்றாக உள்ளது. மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.” என்று ஜே.ஜே மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சஞ்சய் சூரேஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் 24’ஆம் தேதி டிஆர்பி மோசடி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட தாஸ்குப்தாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை நீதிமன்றம், இந்த மாத தொடக்கத்தில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட பல சேனல்களுக்கு ஆதரவாக டிஆர்பிகளை மோசடி செய்வதில் முன்னாள் பார்க் சிஇஓ தாஸ்குப்தா முக்கிய பங்கு வகித்ததாக தெரிகிறது எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது தாஸ்குப்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையிலும், ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது வழக்கின் தீவிரத்தை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0