ஆப்கனிலிருந்து கடத்தப்பட்ட ஹெராயின்..! 1000 கோடி ரூபாய் மதிப்பு..! வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை..!

10 August 2020, 11:17 am
Mumbai_Drugs_UpdateNews360
Quick Share

சுங்க மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டு நடவடிக்கையில், சனிக்கிழமை இரவு நவி மும்பையின் நவா ஷெவா துறைமுகத்தில் இருந்து ரூ 1000 கோடி மதிப்புள்ள 191 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக கடத்தப்பட்டது.

இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“குழாய்களுக்குள் வைத்து இவை கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் வழியாக போதைப்பொருள் கொண்டு வரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது” என்று வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தை மேற்கோளிட்டு ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வந்த போதைப்பொருளை விநியோகிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் அந்த மருந்தை பிளாஸ்டிக் குழாய்களில் மறைத்து மூங்கில் போல தோற்றமளித்து ஆயுர்வேத மருந்துகள் என்று கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

191 கிலோ போதைப்பொருள் என்பது மும்பையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் நடவடிக்கைளில் ஒன்றாகும். முன்னதாக துறைமுகத்தில் சரக்குகளில் தவறாக அறிவிக்கப்பட்டதைக் கண்டறிந்த சுங்க அதிகாரியின் எச்சரிக்கையின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 24

0

0