மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்தி பல லட்சம் அபேஷ் : மருத்துவமனை ஊழியர் உள்பட 12 பேர் கைது

2 July 2021, 12:57 pm
fake vaccination camp - updatenews360
Quick Share

போலி தடுப்பூசி முகாம் நடத்தி பல லட்சம் ரூபாயை அபேஷ் செய்த மருத்துவமனை ஊழியர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான் எனக் கருதி, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மும்பையில் அடுத்தடுத்து போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பணமோசடி வேலைகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே குடியிருப்பு பகுதியில் மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஊசியில் நிரப்பி தடுப்பூசி போட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த 618 தொழிலாளர்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களில் யாருக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், மணீஷ் திரிபாதி என்னும் மருத்துவர் உள்பட 11 பேரை கைது செய்தனர். தற்போது, கோகிலா பென் மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் ராஜேஷ் பாண்டே என்பவரையும் கைது செய்தனர்.

Views: - 206

0

0