இப்படியும் நடக்குமா..? கொரோனா எனக் கூறி காணாமல் போன கணவர்..! கள்ளக்காதலியுடன் சுற்றியது அம்பலம்..!
18 September 2020, 5:28 pmநவி மும்பையில் தனது மனைவியுடன் வசித்து வந்த ஒரு திருமணமான நபர், கடந்த ஜூலை மாதத்தில் தனக்கு கொரோனா இருப்பதாக மனைவியிடம் போனில் தெரிவித்து விட்டு பின் காணாமல் போயுள்ளார்.
28 வயதான அவர் தனது மனைவியை ஜூலை 24 அன்று அழைத்து, சோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், அவர் இறக்கப்போகிறார் என்றும் கூறினார். இதனால் குழப்பமடைந்த மனைவி மேலும் கேள்விகளைக் கேட்கும் முன், அவர் அழைப்பைத் துண்டித்தார்.
அடுத்த நாள், அந்த நபரின் மைத்துனர், அவரது பைக் வாஷி பகுதியில் உள்ள ஒரு தெருவில் நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டார். அவரின் பணப்பை, பைக் சாவி மற்றும் பைக்கில் வைக்கப்பட்டிருந்த அலுவலக சாட்செல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர் கண்டார். இதையடுத்து அந்த நபரின் உறவினர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர் மற்றும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். காவல்துறையினர் வெவ்வேறு கொரோனா பராமரிப்பு மையங்களைத் தேடினர். நகரம் முழுவதும் மற்றும் வாஷி கிரீக்கில் கூட அவரைத் தேடினர்.
இது தொடர்பாக பேசிய மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் துமால், அவரது மொபைல் தொலைபேசியைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் முயன்றனர் என்றும் ஆனால் அது அணைக்கப்பட்டதால் அனைத்து முயற்சிகளும் வீணாகின எனக் கூறினார்.
விசாரணை தீவிரமடைந்து வந்த நிலையில், அவரது திருமணத்திற்கு புறம்பான விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது. ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, அவர் தற்போது இந்தூரில் தனது காதலியுடன் ஒரு வாடகை விடுதியில் போலி அடையாளத்துடன் வசித்து வருவது போலீசாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து ஒரு போலீஸ் குழுவை வாஷி காவல்நிலைய அதிகாரி சஞ்சீவ் துமால் இந்தூருக்கு அனுப்பி, காணாமல் போனவர் இறுதியாக தனது காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து செப்டம்பர் 15’ஆம் தேதி மீண்டும் அவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.