15ம் தேதி வரை தப்பவே முடியாது : முக்கிய இரு நகரங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
12 August 2020, 5:30 pmபல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், முக்கிய இரு நகரங்களில் வரும் 15ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த வெள்ளத்தில் தர்மாக்கோலை வைத்து கப்பல் போல மக்கள் ஓட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை, புனே உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையை பொறுத்தவரையில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும், பால்கர், ராய்காட், ரத்னகிரி, தானே உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.