சாக்கடை குழி அருகே 7 மணி நேரம் நின்ற பெண்.! பூப்போட்டு கொண்டாட வேண்டிய பூக்காரி.!!

11 August 2020, 11:11 am
Mumbai Woman - Updatenews360
Quick Share

மும்பை : மழை வெள்ளம் வடிந்து போக சாக்கடை குழியை திறந்து வைத்த பெண்மணி ஒருவர் 7 மணி நேரமாக மக்கள் அதில் விழுந்து விட கூடாது என காத்திருந்த சம்பவம் வரவேற்பை பெற்று வருகிறது.

மும்பையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மதுங்கா மேற்கு பகுதியில் கடந்த வாரம் துளசி பைப் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வந்த கந்தா மாருதி காலன் என்ற பெண்மணி, சாலையில் இருந்த கழிவுநீர் செல்லும் பகுதியில் மேற்பகுதியை திறந்துவிட்டிருக்கிறார். மழை நீர் முழுமையாக வடியும் வரை அதன் அருகிலேயே 7 மணி நேரம் அவர் நின்றிருந்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சாலையோரம் சாலை அமைத்து தங்கியிருக்கும் அவர் இந்த மழை காலத்தில் தன்னுடைய சிறிய கூடாரம் மற்றும் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் தொலைத்திருந்தார் காலன். இருப்பினும் அந்த பகுதியில் பயணிக்கும் மக்கள் குழியில் தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்காக 7 மணி நேரம் அங்கேயே நின்று சமூக சேவையை செய்துள்ளார்.

தாதர் சந்தையில் பூ விற்று வரும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தால் நாடமாடாத நிலையில் காலனை விட்டு தனியாக வசித்து வருகிறார். பெண்ணின் இந்த செயல் பாராட்டை பெற்று வருகிறது.

Views: - 2

0

0