மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களின் நிலை என்ன..? தேடும் பணி 3வது நாளாக நீடிப்பு

10 August 2020, 12:40 pm
Quick Share

திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி, கனமழைக்கு இடையே தொடர் நீடித்து வருகிறது.

கேரளாவில் 10 நாட்களாக இடுக்கி, வயநாடு, கோட்டயம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சூறாவளிக் காற்றுடன் வீசும் இந்த மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மூணாறில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள குடியிருப்புகள்,  தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

அங்கு தோட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் தமிழகத்தை  சேர்ந்தவர்கள். நிலச்சரிவில் 70க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக கூறப்பட்டது. அவர்களை மீட்கும் பணிகள், 2 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந் நிலையில் முதல் நாள் 26 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 3வது நாளாக இன்றும், எஞ்சிய 27 பேரை தேடும் பணி தொடங்கி உள்ளது.

கனமழைக்கு இடையே மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. யாரும் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Views: - 1

0

0