காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை : உயிருக்கு போராடும் ஒருதலைக் காதலன்!!

Author: Udayachandran
13 October 2020, 4:36 pm
Gilr Murdered - Updatenews360
Quick Share

ஆந்திரா : காதலை ஏற்க மறுத்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த இளைஞர் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சித்தன்ன பேட்டையை சேர்ந்த சின்னாரி என்ற இளம் பெண்
விஜயவாடாவில் உள்ள கோவிட் சென்டர் ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

அவரை ஒருதலையாக காதலித்த விஜயவாடாவை சேர்ந்த நாகபூஷணம் காதலை ஏற்க கோரி சின்னாரிக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதுதொடர்பாக கண்ணவரம் காவல் நிலையத்தில் இளம்பெண் சின்னாரி புகார் கொடுத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் நாகபூசணத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை சின்னாரி பணிக்கு சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நாகபூஷணம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போதுதான் உடன் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை சின்னாரி மீது ஊற்றி நாகபூசணம் தீ வைத்தார். அலறி துடித்த சின்னரி படுகாயம் அடைந்து அங்கேயே மரணமடைந்தார்.

தீ வைப்பு சம்பவத்தின்போது நாகபூஷணம் மீதும் தீப்பற்றி படுகாயமடைந்தார். தகவல் அறிந்த கண்ணவரம் போலீசார் விரைந்து சென்று நாகபூஷணத்தை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 32

0

0