திருமண ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்து விபத்து..! ஐந்து சிறுவர்கள் படுகாயம்..!

2 November 2020, 10:00 am
Crackers_Fire_UP_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில் ஒரு கிராமத்தில், நேற்று இரவு நடந்த திருமண ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் ஐந்து குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித், மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஷாப்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பால்டா கிராமத்தில் ஒரு திருமண ஊர்வலம் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வட்ட அலுவலர் விர்ஜா சங்கர் திரிபாதி கூறுகையில், பட்டாசுகள் அடங்கிய ஒரு பையில் தீப்பிடித்தது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். திருமண ஊர்வலத்தைப் பார்த்து குழந்தைகள் அருகில் நின்று கொண்டிருந்ததால் அவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மீரட்டில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சட்டவிரோத பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்களை மீரட் போலீசார் நேற்று கைப்பற்றினர்.

“நாங்கள் நான்கு நான்கு வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது என்று கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனைகளை மேற்கொண்டோம். அதில் ஒரு வீட்டில் இருந்து பட்டாசுகள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மீட்டெடுத்தோம்.” என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ஆரிஃப் என்ற ஒருவருக்கு பட்டாசு தயாரிக்க உரிமம் இருந்தது. உரிமத்தை புதுப்பிக்க முடியாத நிலையில், அவர் தனது உறவினர் ரிஸ்வானின் வீட்டில் இதைத் தயாரிக்கத் தொடங்கினார். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.

Views: - 23

0

0