“எனது தந்தை உயிருடன்தான் இருக்கிறார்” – ஆவேசம் அடைந்த பிரணாப் முகர்ஜியின் மகன்

13 August 2020, 4:34 pm
Quick Share

சமூக வலைதளங்கள் பொய்யான தகவல்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறிவிட்டது என பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் கொரோனா தொற்றால் அவரின் உடல்நிலை மோசமானது.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த சூழலில், இன்று அவரின் உடல்நிலை மேலும் மோசமானதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. உடனே ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளப்பக்கங்களில் ஏராளமானோர் பிரணாப் முகர்ஜி இறன்து விட்டதாக கூறி RIP என பதிவிட்டு தகவலை பகிர்ந்தனர்.

இதை பார்த்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும், இதுபோன்ற பொய்யான தகவலை யாரும் பகிர வேண்டாம் எனவும் வருத்தத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளப்பக்கங்கள் பொய்யான தகவல்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறிவிட்டது எனவும் அவேசம் அடைந்துள்ளார்.

Views: - 0 View

0

0