சபரிமலைக்கு சென்று வந்ததுலிருந்து ஒரே அடிதடிதான் : பிந்து அம்மினியை அடித்து துவைத்து மல்லுக்கட்டிய மர்மநபர்!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2022, 1:57 pm
கேரளா : சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை கோழிக்கோட்டில் மர்மநபர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சபரிமலைக்கு கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து முதன்முதலில் கோவிலில் தரிசனம் செய்த இரண்டு பெண்களில் பிந்து அம்மினியும் ஒருவர்.
அப்படி சென்ற வந்த பிந்து அம்மினிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அன்று முதல் பல்வேறு தரப்பினரும் அவர் மீது தாக்குதல் நடத்தினர். பொது இடங்களில் செல்லும் போதெல்லாம் தாக்குதலுக்கு ஆளாவது உண்டு.
வழக்கறிஞரான அவர், தன்னுடைய வழக்கு சம்மந்தமாக கேரள மாநிலம் கோழிக்கோட வடக்கு கடற்கரை அருகே சென்றுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் பிந்துவின் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாக அடித்தார்.
இந்த காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூறிய பிந்து, தனக்கு ஏதாவது நடைபெறும் என்று உள் மனது கூறியதாகவும் அனால் கொயிலாண்டி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டதாகவும் ஆனால் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
தன்னை தாக்கிய நபர் குறித்து புகார் அளித்தால் சாதாரண வழக்கையே பதிவு செய்துள்ளதாகவும், தனக்கு கேரள போலீசாரிடம் நீதி கிடைக்காது என கூறியுள்ளார்.
0
0