விளம்பர விவகாரம்: தனிஷ்க் நகை கடை மீது மர்மகும்பல் தாக்குதல்..!!

Author: Aarthi
14 October 2020, 1:43 pm
tanishq - updatenews360
Quick Share

லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படும் விளம்பர விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள தனிஷ்க் நகை கடைமீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.

அகமதாபாத்: சமூக வலைதளங்களில் பிரபல டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் ட்விட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனதால், தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து நீக்கியது.

இந்நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரம் நீக்கம் செய்யப்பட்டதற்காக எம்.பி.சசி தரூர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விளம்பரம் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள தனிஷ்க் கடையில் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ளது. கடையின் மேலாளரை கும்பல் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு கூறி உள்ளது.

மதச்சார்பற்ற விளம்பரத்தை ஒளிபரப்பியதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக கட்ச் மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என மேலாளர் மன்னிப்புக் கடிதத்தில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

Views: - 62

0

0