டெல்லியில் பிரபல பூ மார்க்கெட்டில் மர்ம பையில் வெடிகுண்டு : நிபுணர்கள் சாமர்த்தியத்தால் உயிர்ச் சேதம் தவிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 3:49 pm
Ghazipur bomb - Updatenews360
Quick Share

டெல்லி : டெல்லியிலுள்ள காசிப்பூர் சந்தை பகுதியில் மர்ம பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நாடு முழுவதும் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள காசிப்பூர் மலர் சந்தை அருகில் வெடிகுண்டுகளுடன் கூடிய மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு பை கண்டறியப்பட்டதும் காவல்துறையினர் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பையிலிருந்த வெடிகுண்டுகளை, வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர்.

பரபரப்பாக பொதுமக்கள் இயங்கி வரக்கூடிய மலர் சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 186

0

0