போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா..! தலைமை விருந்தினராக காங்கிரஸ் எம்எல்ஏ..!

27 September 2020, 11:00 pm
Mysuru_Fake_Doctorate_UpdateNews360
Quick Share

போலி கௌரவ முனைவர் பட்டங்களை விநியோகிக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மைசூரு காவல்துறை சோதனை நடத்தி இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நடவடிக்கைக்கு துணை போலீஸ் கமிஷனர் ஏ என் பிரகாஷ் கவுடா தலைமை தாங்கினார். பணத்திற்கு ஈடாக சுமார் 150 பேருக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விழாவை ஹன்சூர் சாலையில் அமைந்துள்ள ருச்சி தி பிரின்ஸ் ஹோட்டலில் கங்கம்மா தேவி சக்தி பிரீதம் அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைதி கவுன்சில் மற்றும் சர்வதேச உலகளாவிய அமைதி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தன. விழாவின் முதன்மை விருந்தினராக காங்கிரசைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராமப்பா கலந்து கொண்டார்.

கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாததால் எம்.எல்.ஏ விழாவில் கலந்து கொள்ளாமல் வளாகத்தை விட்டு வெளியேறியதாக ஒரு அறிக்கையில் போலீசார் தெரிவித்தனர். மேலும், விழாவிற்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி வாங்கவில்லை.

“எம்.எல்.ஏவும் பட்டம் பெறும் வேட்பாளராக இருந்தார். பட்டம் பெற கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து மொத்தம் 142 பேர் கூடியிருந்தனர்.” என்று காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பட்டங்களுக்கு ரூ 20,000 முதல் ரூ 100,000 வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. வேட்பாளர்கள் சிலர் தங்களது பட்டங்களை வழங்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காவல்துறை அத்தகைய கோரிக்கையை மறுத்தது. இது குறித்து விஜயநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.