ஊர்வலம் போகக் கூடாதா..? வாளேந்தி போலீஸ் மீது தாக்குதல் நடத்திய சீக்கியர்கள்..! வைரலாகும் வீடியோ..!

Author: Sekar
30 March 2021, 3:42 pm
nanded_gurudwara_violence_Updatenews360
Quick Share

கொரோனா தொற்றுநோயால் பொது ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், நந்தேடில் வாள் வீசி வன்முறையில் ஈடுபட்ட ஒரு சீக்கிய கும்பல் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஸ்ரீ ஹசூர் சாஹிப் குருத்வாராவில் நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவின் நந்தேடு மாவட்டத்தில் உள்ள வஜிராபாத் போலீசார் 64 அடையாளம் தெரிந்த நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற நபர்கள் மீது மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

குருத்வாராவிலிருந்து வாள் வீசும் கும்பல் கோஷமிடுவதும், காவல்துறையினர் முன்வைத்த தடுப்புகளை உடைத்து, போலீஸ்காரர்களைத் தாக்குவதும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வன்முறையில் நான்கு கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர் மற்றும் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்த போலீஸ்காரர்களில் ஒருவரது நிலைமை மோசமாக உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் குருத்வாரா கமிட்டியைச் சேர்ந்த எவருக்கும் ஏதாவது பங்கு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“கொலை முயற்சி, கலவரம், மற்றும் ஆயுதச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் 14 பேரை நாங்கள் இதுவரை கைது செய்துள்ளோம். எஃப்.ஐ.ஆரில் சுமார் 64 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மற்றவர்களை கண்டறிய தேடுதல் நடைபெறுகிறது.” என்று நந்தேடு பகுதியின் துணை ஐஜி நிசார் தம்போலி கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஹோலா மொஹல்லா பொது ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அந்த அதிகாரி நேற்று தெரிவித்தார். இது ஹோலி பண்டிகைக்கு மறுநாள் சீக்கியர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

“குருத்வாரா கமிட்டிக்கு ஊர்வலம் எதுவும் இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. அவர்கள் எங்கள் உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்றும் குருத்வாரா வளாகத்திற்குள் நிகழ்வை நடத்துவார்கள் என்றும் அவர்கள் எங்களுக்கு உறுதியளித்திருந்தனர்.” என்று துணை ஐஜி கூறினார்.

இருப்பினும், நேற்று மாலை 4 மணியளவில் நிஷான் சாஹிப் வாயிலில் அழைத்து வரப்பட்டபோது, ​​பல பங்கேற்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 300’க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாயிலிலிருந்து வெளியேறி, தடுப்புகளை உடைத்து, போலீஸ்காரரைத் தாக்கத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.

சீக்கியர்களின் புனித ஆலயமான ஸ்ரீ ஹசூர் அப்சால் நகர் சாஹிப் அமைந்துள்ள நந்தேடு ஒரு முக்கியமான சீக்கிய யாத்திரை மையமாகும்.

10’வது மற்றும் கடைசி சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் (1666-1708), குரு கிரந்த் சாஹிப் என்ற புனித புத்தகத்தை சீக்கிய மதத்தின் நித்திய குருவாக அபிஷேகம் செய்து தனது வாழ்க்கையின் கடைசி 14 மாதங்களை இங்கு கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 71

0

0