நாரதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர்களுக்கு ஜாமீன்..! சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

17 May 2021, 9:05 pm
firhad_hakim_updatenews360
Quick Share

நாரதா ஸ்டிங் டேப் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு மேற்கு வங்க அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு முன்னாள் அமைச்சருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

மூத்த அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி மற்றும் ஃபிர்ஹாத் ஹக்கீம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி அனுபம் முகர்ஜி ஜாமீன் வழங்க அனுமதித்தார்.

அவர்கள் நீதிமன்றத்தின் முன் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கொல்கத்தாவில் உள்ள வீடுகளில் இருந்து காலையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிஜாம் அரண்மனையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்ததால், ​​அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் ஒரு பெரிய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், பாஜக நடத்தும் மத்திய அரசு சிபிஐயை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 
இவர்கள் 4 பேரும் 2014’ல் லஞ்சம் வாங்கும் போது கேமராவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இன்று, நூற்றுக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் மம்தா அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை மீறி, பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதினர். ஹூக்லி, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிளர்ச்சியாளர்கள் டயர்களை கொளுத்தி சாலைகளைத் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 119

0

1