1984ம் ஆண்டு கலவரம்..! குஜ்ரால் பேச்சை கேட்காத நரசிம்ம ராவ்..! புதிய சர்சசைக்கு வித்திட்ட மன் மோகன் சிங்

5 December 2019, 7:59 pm
Quick Share

டெல்லி: ஐகே குஜ்ராலின் ஆலோசனையை நரசிம்ம ராவ் கேட்டிருந்தால், 1984ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தை தடுத்திருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

டெல்லியின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் 100வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 1984ம் ஆண்டு நடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். அந்த தருணத்தில் ஐகே குஜ்ரால் பி.வி. நரசிம்மராவிடம் சென்றார்.

நிலைமை கையை மீறி சென்றிருக்கிறது. ராணுவத்தை அனுப்பினால் கலவரத்தை தடுக்கலாம், எனவே ராணுவத்தை அழையுங்கள் என்று யோசனை தெரிவித்தார்.

ஆனால், அந்த யோசனையை அவர் ஏற்கவில்லை. ஒருவேளை அந்த அறிவுரையை நரசிம்ம ராவ் கேட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம் என்று கூறினார்.

1984ம் ஆண்டு சம்பவமானது காந்தி குடும்பத்தினரின் அரசியல் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகும். அந்த பழியை துடைக்கவே இப்போது நரசிம்ம ராவ் மீது பழியை போடுகிறார் என்று பாஜக புகார் கூறி இருக்கிறது.