“திருநங்கையருக்கான தேசியக் கவுன்சில்” – மத்திய அரசு அதிரடி..!

22 August 2020, 6:19 pm
Quick Share

திருநங்கையருக்கான தேசியக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் திருநங்கைகளை மிகக்கேவலமாக ஒதுக்கிக் கேலி செய்த காலம் ஒன்றிருந்தது. காலம் மாற மாற திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

திருநங்கைகள் சமூகத்தை மூன்றாம் பாலினம் என அறிவித்து அவர்களுக்கான ஒதுக்கீடும் வந்தது. இன்று சமுதாயத்தில் திருநங்கைகள் படித்துப் பட்டம் பெற்று பொறியாளர்கள், காவல்துறை, கலைத்துறை, மருத்துவம், அரசியல் என பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மேலும் அவர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதி செய்யும் விதமாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் திருநங்கை உரிமைப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து, தற்போது, திருநங்கையருக்கான தேசியக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவுன்சிலில் திருநங்கையர் நலனுக்காக செயல்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த கௌரிசங்கரும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கவுன்சிலில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளாக சுழற்சி முறையில் மாநில அரசுகளும், தனி நபர் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 28

0

0