பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு: 3ம் இடத்தில் பெங்களூர்…தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் தகவல்…!!

Author: Aarthi
14 October 2020, 4:50 pm
abuse - updatenews360
Quick Share

கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் டெல்லி முதலிடம் பிடித்து உள்ளதாக தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 2018ம் ஆண்டு நகரங்களின் அடிப்படையில், டெல்லி முதல் இடமும், மும்பை 2-வது இடமும், காசியாபாத் 3-வது இடமும், கான்பூர் 4-வது இடமும் பிடித்து இருந்தது. பெங்களூரு 5-வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் 2019ம் ஆண்டும் 431 வழக்குகளுடன் டெல்லி முதலிடத்திலும், 377 வழக்குகளுடன் மும்பை 2ம் இடத்திலும், 158 வழக்குகளுடன் பெங்களூரு 3வது இடத்திலும், 117 வழக்குகளுடன் கான்பூர் 4வது இடத்திலும், 115 வழக்குகளுடன் நாக்பூர் 5வது இடத்திலும், 114 வழக்குகளுடன் காசியாபாத் 6வது இடத்திலும், 110 வழக்குகளுடன் புனே 7வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் 8வது இடத்திலும், 83 வழக்குகளுடன் கொச்சி 9வது இடத்திலும், 82 வழக்குகளுடன் இந்தூர் 10வது இடத்திலும் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 71

0

0