பிரணாப் முகர்ஜி மறைவு: அரைக் கம்பத்தில் தேசியக் கொடி., ஏழு நாள்கள் துக்கம் அனுசரிப்பு..!

1 September 2020, 10:12 am
Quick Share

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி நாடு முழுவதும் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டு, நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த கோமாவில் இருந்துவந்தார். தொடர்ந்து அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி பிரணாப் முகர்ஜி நேற்று உயிரிழந்தார்.

அவருடைய மறைவைத் தொடர்ந்து அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

பிரணாப் முகர்ஜியினை மறைவைத் தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று முதல் வரும் செப்டம்பர் 6-ம் தேதிவரை ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மட்டும் இன்றி நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

Views: - 0

0

0