நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு : 15.97 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்..!

13 September 2020, 8:55 am
Quick Share

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,842 தேர்வு மையங்களில் இன்று நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை 1,17,990 பேர் எழுதவுள்ளனர். மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வுக்கு காலை 11.00 மணிக்கே தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் இருக்க வேண்டும்.

உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தவிர்க்க ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.

ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் எடுத்து வர வேண்டும். மாணவரின் புகைப்படம், முகக்கவசம், சானிடைசர், கையுறைகள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். 99.4 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

Views: - 0

0

0