சென்னையில் கடத்தப்பட்ட இந்திய கடற்படைஅதிகாரி..! மகாராஷ்டிராவில் உயிரோடு எரிப்பு..! பகீர் பின்னணி..!

6 February 2021, 8:51 pm
palghar_navy_official_kidnapped_updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் பால்கர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் உயிரோடு எரிக்கப்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் இன்று மரணமடைந்தார். கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததைத் தொடர்ந்து அவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

பால்கர் காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜார்கண்டின் ராஞ்சியில் வசிக்கும் 27 வயதான சூரஜ் குமார் துபே, தமிழ்நாட்டில் உள்ள கடற்படைப் பிரிவான ஐ.என்.எஸ் கோயம்புத்தூரில் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு அருகில் இருந்து அவர் கடத்தப்பட்டு பால்கரில் உள்ள வேவாஜி காட்டுப் பகுதிக்கு பல மாநில எல்லைகளைத் தாண்டி கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் ரூ 10 லட்சம் தொகையை பேரம் பேசினர். ஆனால் அந்த கோரிக்கை கடற்படை அதிகாரியின் உறவினர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத சூழல் நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் அந்த நபருக்கு தீ வைத்து காட்டில் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று பால்கர் காடுகளில் அவர் சில தீக்காயங்களுடன் காணப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். பின்னர் அவர் தஹானுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர், அவர் ஐ.என்.எஸ் அஸ்வினிக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மீது போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பால்கர் எஸ்.பி. தத்தாத்ரே ஷிண்டே தெரிவித்தார்.

Views: - 0

0

0