சுஷாந்த் சிங் வழக்கு..! போதைப்பொருள் வியாபாரிக்கு ரியா சக்ரவர்த்தியுடன் தொடர்பு கிடையாதா..? என்சிபி அறிக்கையில் மர்மம்..!

4 September 2020, 10:11 am
rhea_updatenews360
Quick Share

செப்டம்பர் 9’ஆம் தேதி வரை என்சிபியின் காவலில் போதைப்பொருள் விற்பனையாளர் ஜைத் விலாத்ரா வைக்கப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட ஜைதிற்கு ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியுடன் தொடர்பு எதுவும் இருப்பதாக அவர்களின் ரிமாண்ட் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவில்லை.

ரிமாண்ட் விண்ணப்பத்தில், என்.சி.பி., “சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் என்.சி.பி போதைப்பொருள் கோணத்தை விசாரித்து வருகிறது. இது மிகவும் முக்கியமானது மற்றும் மும்பையில் குறிப்பாக பாலிவுட்டில் போதைப்பொருள் கட்டமைப்பை உடைப்பதற்கு இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வாதிடும் போது, குற்றம் சாட்டப்பட்ட ஜைதின் காவலில் உள்ள என்.சி.பிக்கு மேலதிக விசாரணை தேவை என்று என்.சி.பியின் சிறப்பு அரசு வழக்கறிஞர் கூறினார். தனது அறிக்கையில், ஜைத் தான் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அவரது இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் போதைப்பொருள் தொடர்பானது.

செப்டம்பர் 1’ஆம் தேதி ஜைதின் பாந்த்ரா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், என்சிபி குழு ரூ 9.50 லட்சம் இந்திய ரூபாய் நோட்டுக்கள், 2081 அமெரிக்க டாலர், 180 யுகே பவுண்ட் மற்றும் யுஏஇ 15 திர்ஹாம்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

அதே சமயத்தில் சோதனையின்போது அவரது இல்லத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எதையும் என்சிபி கண்டுபிடிக்கவில்லை.

இதற்கிடையே ஜைதின் வழக்கறிஞர் தாரக் சயாத், “நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளோம். ஜைத் என்சிபிக்கு அளித்த எந்த அறிக்கையும் உண்மையோ அல்லது சுயமானதோ அல்ல என்று கூறினார்.

ரிமாண்டில், சுஷாந்த் சிங் வழக்கைப் பற்றியோ அல்லது ஷோயிக் உடனான எந்த தொடர்புகளையோ குறிப்பிடவில்லை. ஆனால் அரசு வழக்கறிஞர் வாதிடும் போது அதை தெரிவித்தார். ஜைதுடன் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சோதனைகளில் என்.சி.பியால் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 11

0

0