பாஜக தொண்டரின் தாயை தாக்கிய திரிணாமுல் கட்சித் தொண்டர்கள்..! தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவு..!
1 March 2021, 9:34 pmமேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி ஆதரவாளர்களால் ஒரு வயதான பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் சூ மோட்டோ வழக்காக எடுத்துள்ளது.
பாஜக தலைவர் கோபால் மஜும்தாரின் தாயார் ஷோவா மஜும்தார் கடந்த சனிக்கிழமை ஆளும் கட்சியின் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் திரிணாமுல் கட்சி இதை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, பாஜக ஆதரவாளரின் தாயார் தாக்கப்படவில்லை என்றும், சில வியாதிகளால் அவரது முகம் வீங்கியதாகவும் போலீசார் கூறினர்.
“தேசிய மகளிர் ஆணையம் ஒரு ட்விட்டர் பதிவில் ஒரு வயதான பெண் அவரது மகன் வேறு கட்சியைச் சார்ந்தவர் என்பதால் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.” என்று தேசிய மகளிர் ஆணையத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு இதை சூ மோட்டோ வழக்காக எடுத்துள்ளது மற்றும் தலைவர் ரேகா சர்மா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், விரிவான நடவடிக்கை கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0