நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் : 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாட திட்டம்..!

26 August 2020, 5:53 pm
Quick Share

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கான பருவ நிலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழலில், மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரல் மற்றும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

இந்த சூழலில் தேர்வு ஒத்தி வைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கேட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இன்று காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அனுகலாம் என ஆலோசனை கூறினார். இதற்கு பிற மாநில முதலமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

Views: - 25

0

0