வரைபடம், ராமர் பிறப்பிடம்..! வரும் 17ம் தேதி இந்தியா-நேபாளம் முக்கிய பேச்சுவார்த்தை

12 August 2020, 2:21 pm
Nepal_Border_Outpost_UpdateNews360
Quick Share

காத்மாண்டு: பரபரப்பான நிலையில், இந்தியா, நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் சமீப காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி, இந்திய பகுதிகளை தங்களது நாட்டுடன் இணைத்து புதிய வரைபடம் உருவாக்கினார்.

அதுவே இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது. ராமர் பிறந்தது நேபாளத்தில் தான், இந்தியாவில் இல்லை என்று சொல்லி வைக்க விரிசல் இன்னமும் அதிகமானது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியா – நேபாளம் இடையே வரும் 17ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

காத்மாண்டுவில் இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இரு நாடுகள் இடையேயான ஒரு வழக்கமான சந்திப்பின் தொடர்ச்சியே. இது இப்போது மட்டுமே நடைபெறும் ஒன்று என எண்ணிவிடக்கூடாது. 2016ம் ஆண்டில் இருந்து சந்திப்புகள் நடந்து வருகின்றன.

இரு நாடுகளின் பொருளாதாரம், மேம்பாட்டுத் திட்டங்களள் மறு ஆய்வு செய்யப்படும். அதற்காக தான் இத்தகைய கூட்டங்கள் நடைபெறும் என்று அவர்கள் கூறி உள்ளனர். 

Views: - 0 View

0

0