போதைப்பொருள் விவகாரம்..! நேபாளத்தைச் சேர்ந்த நபர் கையும் களவுமாக கைது..! உ.பி. போலீசார் அதிரடி..!

13 September 2020, 6:45 pm
Drug_Racket_UpdateNews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தின் மகர்ஜ்கஞ்ச் மாவட்டத்தில் இந்தோ-நேபாள எல்லையில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ 2.17 கோடி மதிப்புள்ள 6.1 கிலோ சரஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்  தற்கொலை வழக்கில் ரியா சக்ரவர்த்தியின் போதைப்பொருள் விவகாரம் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் போதைப்பொருள் சார்ந்த பல கைதுகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரமான சோனாலியின் ஷியாம்கோட் பகுதியில், இன்று காலை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சோனாலி காவல் நிலைய பொறுப்பாளர் அசுதோஷ் சிங் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சோம் பகதூர் நேபாளி நேபாளத்திலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸை வழக்கமாக சோதனை செய்யும் போது கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற கடத்தல்காரர்களுடனான அவருடைய தொடர்பைக் கண்டறிய நேபாள காவல்துறையின் உதவியைப் பெற உத்தரபிரதேச போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Views: - 9

0

0