நேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..! மத்திய அரசு அறிவிப்பு..!

19 January 2021, 10:43 am
Netaji_Birthday_UpdateNews360
Quick Share

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125’வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கலாச்சார அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு கூட்டத்தை நடத்தியது.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து இந்த விஷயத்தை பொது களத்தில் வைக்க தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் வரும் ஜனவரி 23, 2021 முதல் ஒரு ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நேதாஜி குறித்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் முன்னோட்டமாக இந்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளை தைரிய நாளாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் வரும் ஜனவரி 23’ஆம் தேதி பிரதமர் மோடி மேற்குவங்கத்திற்கு சென்று, நேதாஜிக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0