மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரே நாளில் 60 பேர் பலி…!!

16 November 2020, 8:31 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Corona_Delhi_UpdateNews360

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 1 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 18 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 26

0

0