ஒரு இரவில் நடந்த மாற்றம்…! ஜம்மு காஷ்மீருக்கு புதிய ஆளுநர் நியமனம்…! ஜனாதிபதி அறிவிப்பு

6 August 2020, 9:38 am
Quick Share

டெல்லி: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் முர்மு ராஜினாமா செய்ய, அவருக்கு பதிலாக புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவர் தமது பதவியை திடீரென ராஜினாமா  செய்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தமது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இந் நிலையில், துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து குடியடிரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமாவை ஏற்ற பின்னர் அவர் ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய ஆளுநரான சின்ஹாவுக்கு வயது 61. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். காசியாப்பூர் லோக்சபா தொகுதியில் பாஜக எம்பியாக அவர் 3 முறை வெற்றி பெற்றவர். அமைச்சரவையில் ரயல்வே, தொழில்நுட்ப துறையில் இணை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0