காஷ்மீரில் அதிகரிக்கும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்: NIA அதிரடி சோதனை…70 பேர் கைது..!!

Author: Aarthi Sivakumar
10 October 2021, 1:24 pm
Quick Share

ஜம்மு – காஷ்மீர்: தேசிய புலனாய்வு முகமை (NIA) நடத்திய சோதனையில் 70 இளைஞர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி முதலமைச்சர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து மற்றுமொரு தாக்குதல், கடந்த செவ்வாய் கிழமை நிகழ்ந்தது. இதில், 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், காஷ்மீரில் வசித்து வரும் காஷ்மீர் பண்டிட்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தினர். இதேபோன்று 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கல் வீச்சில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள் என கடந்த 3 நாட்களில் 570 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Views: - 427

0

0