தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி..? செய்தித்தாள் உரிமையாளர் உட்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை..!

28 October 2020, 12:55 pm
NIA_Updatenews360
Quick Share

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 

இதில் ஒரு செய்தித்தாள் உரிமையாளர் மற்றும் சில அரசு சாரா நிறுவனங்களுக்கு சொந்தமான அறக்கட்டளை உட்பட, பல்வேறு இடங்களில் பயங்கரவாத நிதி விசாரணை தொடர்பாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தேடுதல் வேட்டை இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீநகரில் ஒரு முக்கிய ஆங்கில நாளிதழின் வளாகத்தில் அமைந்துள்ள அறக்கட்டளையின் அலுவலகத்தை உள்ளூர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் உதவியுடன் என்ஐஏ குழு முழுமையாக சோதனை செய்தது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நிதியுதவி செய்ததாகக் கூறி 2000’ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குறைந்தது மூன்று அரசு சாரா அமைப்புகளும் (என்ஜிஓ) என்ஐஏவால் சோதனை செய்யப்பட்டன.

என்.ஐ.ஏ வட்டாரங்களின் படி, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க, நன்கொடையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெறுகின்றன எனக் கூறப்படுகிறது.

Views: - 17

0

0

1 thought on “தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி..? செய்தித்தாள் உரிமையாளர் உட்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை..!

Comments are closed.