இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஜொலித்த நயாகரா! எதற்காக தெரியுமா?

2 May 2021, 3:43 pm
Quick Share

கொரோனா இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா, இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டு ஜொலித்தது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக உள்ளது. தினமும் பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி, உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. இந்தியாவுக்கு இவ்வாறாக யுஏஇ ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில், இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு, கனடா ஆதரவு அளித்திருக்கிறது. அமெரிக்க – கனடா எல்லையில் அமைந்திருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி, உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். இதில் கனடா பகுதியில் அமைந்திருக்கும் ஆண்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி இவ்வாறு ஒளிரூட்டப்பட்டிருக்கிறது. இதன் புகைப்படத்தினை நயாகரா நீர்வீழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு, பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சோதனை காலத்தில், இந்தியாவுடனான ஒற்றுமையை பிரதிபலிக்கும் வண்ணம், நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. இதற்க நன்றி தெரிவித்து, இந்திய நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 61

0

0

Leave a Reply