நிகிதா தோமர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை..! ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பு..!

Author: Sekar
26 March 2021, 4:36 pm
hariyana-murder1-updatenews360
Quick Share

ஹரியானாவில் கல்லூரி வாசலில் வைத்து, பட்டப் பகலில் இளம் பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஃபரிதாபாத் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள பாலப்கர் பகுதியில் கல்லூரி முடித்து வெளியே வந்த நிகிதா தோமர் எனும் இளம் பெண்ணை தவுசீப் மற்றும் அவரது நண்பர் ரெஹான் ஆகியோர் காரில் கடத்த முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களிடமிருந்து தப்பியோட நிகிதா தோமர் முயன்ற நிலையில், தவுசீப் தன்வசம் வைத்திருந்த நாட்டுக்கு துப்பாக்கியால், பொதுவெளியில் நிகிதாவின் தலையிலேயே சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவுசீப், அவரது நண்பர் ரெஹான் மற்றும் தவுசீப்பிற்கு துப்பாக்கி வழங்கிய அஸ்ருதீனை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஃபரிதாபாத் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 24’ஆம் தேதி தவுசீப் மற்றும் ரெஹான் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், இவர்களுக்கு ஆயுத சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட அஸ்ருதீனை வழக்கிலிருந்து விடுவித்தது. மேலும் இவர்கள் இருவருக்குமான தண்டனை விபரங்கள் இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று தண்டனை விபரங்களை வெளியிட்ட ஃபரிதாபாத் விரைவு நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Views: - 100

0

0