கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று..!

Author: Udhayakumar Raman
5 September 2021, 6:46 pm
Quick Share

நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளா மாநிலம், சூலூர் சாத்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று சிறுவனுக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து அவர் கோழிகோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைரலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3 முறை நடத்திய ஆய்வில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதை தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில்கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த 2 பேரும், நிபாவால் இன்று கோழிக்கோட்டில் உயிரிழந்த 12 வயது சிறுவனின் தொடர்பில் இருந்து, தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ள 20 பேரில் உள்ளவர்கள் என்று அவர் கூறினார். இதுவரை சிறுவனிடம் தொடர்பில் இருந்த 188 பேரை அடையாளங்கண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த இருவரில் ஒருவர் தனியார் மருத்துமனை பணியாளர் எனவும் மற்றவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஊழியர் எனவும் அவர் கூறினார். தொற்று அபாயம் அதிகம் உள்ள 20 பேரும் விரைவில் மருத்துவகல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்ற அவர், எஞ்சியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். தற்போது கேரளாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிறுவன் பலியானது கேரள மாநிலம் மட்டுமல்லாமல் அதையொட்டி உள்ள தமிழகத்திலும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 213

0

0